சிங்கப்பூர்,
ந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு ரெயிலை இயக்கியுள்ளது சிங்கப்பபூர் அரசு. இது அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி  இந்த மாதம் இறுதியில் 29-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
singapore
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவர்.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசு அங்குள்ள ரெயில் நிலையம் மற்றும் ரெயில் ஒன்றில் தீபாவளியை நினைவுபடுத்தும் வகையில் ரங்கோலி, மயில் கோலங்கள் மற்றும் பட்டாசுகள், தீபங்கள் போன்றவற்றை வரைந்து அத்துடன் ஹேப்பி தீபாவளி என்றும் எழுதி அக்குள்ள இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்தியர்களையும், இந்தியர்களின் கலாச்சாரத்தையும் ஆதரிக்கும் வகையில் இந்த ரெயில் இயக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூர் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் மத்தியில் இந்த ரெயில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க அரசு தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.