2

 

ஃபிரான்ஸ், லெபனான், துருக்கி ஆகிய நாடுகளில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்காகக் கலங்கி நிற்கும் அதே வேளையில், கேட்பார் யாருமற்று, விடுதலை மறுக்கப்பட்டு , பல்லாண்டுகளாக சிறையில் வாடி, தற்போது பிணையும் மறுக்கப்பட்டு, உண்ணாநிலைப் போராட்டத்தின் ஒன்பதாவது நாளில் உயிர் ஊசலாட்டத்தில் இருக்கும் ஈழத்தமிழ் அரசியல் கைதிகளின் நிலைக்காகவும் கொஞ்சம் கவலைப்படுவோமே !!!

aaaa

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றோர் தமிழர் பிரதிநிதி அமைப்பு கொழும்பில் வலுவாக, மைத்ரி – ரணில் குழுவோடு நல்ல நட்போடுதான் உள்ளது. எந்தக் குறைச்சலும் இல்லை. ‘Diplomacy’ என்ற பெயரால் இன்னும் நாள் கடத்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் எடுக்கும் நியாயமான முயற்சிகளுக்குக் கைகொடுக்க வேண்டும். அவர் மீது பிலாக்கணம் பாடி நடவடிக்கை எடுப்பதைத் ‘தமிழீழம்’ அமைந்த பிறகு வைத்துக் கொள்ளலாம். அவசரமில்லை. அரசியல் கைதிகளின் உயிர்தான் இப்போதைக்கு அவசர நிலை !!!!! அவர்களுக்காக வெளியே துடியாய்த் துடிக்கும் அவர்தம் உறவினர்களின் நிலை சொல்லத்தக்கதில்லை !!!!

சமீபத்திய டப்ளின் மாநாடு , ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் மனித உரிமை அறிக்கையில் இலங்கையின் மீதான அதிருப்தி ஆகியவை நிகழ்ந்திருப்பதால் புலம்பெயர் தமிழர்கள் இன்னும் வலுவோடு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் !!!!!

(கவிஞர் தாமரையின் முகநூல் பதிவு)