v

வாஷிங்டன்:

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இறுதி போட்டியில், அமெரிக்காவின் மாட்டிக் – கொரி இணையை எதிர்கொண்ட பயஸ் – ஹிங்கிஸ் இணை  6-4, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றது.

இதன் மூலம், 1969க்கு பிறகு ஒரே ஆண்டில் மூன்று சாம்பியன் பட்டங்களை வென்ற முதல் கலப்பு இரட்டையர் என்ற சாதனையை பயஸ் ஹிங்கிஸ் இணை பெற்றிருக்கிறது.

மேலும், கலப்பு இரட்டையரில் 9 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை லியாண்டர் பயஸ் படைத்துள்ளார்.