saritha-s-nair
கேரள மாநிலத்தை உலுக்கிய சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர், முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கும் இந்த மோசடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சோலார் திட்டத்தற்காக அவருக்கு லஞ்சம் வழங்கியதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி சரிதா நாயர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதி கெமல் பாஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுபோன்ற மனுவை தாக்கல் செய்யும் நபர் மீது நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.