மதுரா
மதுரா நகர பாஜக மக்களவை உறுப்பினர் ஹேமாமாலினி அந்த நகருக்கு வரும் மக்கள் குரங்குகளுக்கு உணவளிப்பதை தாக்கி பேசி உள்ளார்.
மதுரா நகரில் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள ஹேமாமாலினி மிகவும் புகழ்பெற்ற பாலிவுட் நட்சத்திரம் ஆவார். இவர் ஒரு காலத்தில் கனவுக் கன்னி என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர். இவர் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளார்.
இவர் வாக்கு சேகரிக்க தொகுதியில் பயணம் செய்த் வருகிறார். இந்த தொகுதியில் வரும் 18 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால் அவர் இந்த பகுதியில் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள ஓமேக்ஸ் விட்டு வசதி குடியிருப்பில் அவர் ஒரு சிறிய இல்லத்தை கட்டி உள்ளார்.
மதுரா நகரில் நேற்று அவர் வயலில் வேலை செய்யும் பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் அங்கிருந்த டிராக்டரை ஓட்டினார். அந்த பெண்களிடம் மதுராவில் குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளதாக கூறினார். அத்துடன் தமது வீட்டிலும் குரங்குகள் அதிகம் தொல்லை அளிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பிரசாரத்தில் குரங்குகள் தொல்லை பற்றி ஹேமாமாலினி, “குரங்குகள் எங்கு செல்லும்? அவைகளுக்கு இது வசிப்பிடமாகும். இங்கு வரும் மக்கள் இந்த குரங்குகளுக்கு ஃப்ரூட்டியையும் சமோசாவையும் கொடுத்து கெடுத்துள்ளனர். குரங்குகளுக்கு பழம் மட்டுமே அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
#WATCH Vrindavan: BJP MP Hema Malini at Sudama Kuti answers a question on monkey menace in the area. She says, "Coexistence hai na. Monkey kahan jaega? Problem kya hai, yahan aane waale yaatri Frooti dete hain, samosa de de ke unko kharab kar diya. Unko sirf phal dijiye." pic.twitter.com/NJzJvEE6nA
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 11, 2019
காலையில் கூறியதை மாலையே மாற்றி விட்ட ஹேமாமாலினி குறித்து மதுரா நகர வாசிகள் கிண்டல் செய்துள்ளனர்.