சென்னை:

ந்திய நாடாளுமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான், பட்ஜெட் உரையின்போது, தமிழ் புகுந்து விளையாடியது.  மக்களவையில் முதன்முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சங்கத் தமிழ் பாடலை நினைவு கூர்ந்து உரையாற்றியது வியப்பையும், பெரும் வரவேற்பையும் பெற்றது.

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட நிதி அமைச்சசர் நிர்மலா சீத்தாராமன், பட்ஜெட் உரையின்போது, விரி விதிப்பு தொடர்பாக  பிசிராந்தையாரின் புறநாநூறு பாடலை தமிழில் வாசித்து, அதற்கு விளக்கம் அளித்து பேசினார்.

மோடி அரசின் இரண்டாவது நிதி அமைச்சராக பதவியில் ஏற்றுள்ள நிர்மலா சீத்தாராமன், இந்திய பாராளு மன்றத்தின் 2வது நிதி அமைச்சர் என்ற பெருமைக்கும் உரியவராகிறார்.

ஏற்கனவே முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி முதல் நிதி அமைச்சராக இருந்த நிலையில், 2வது பெண் நிதி அமைச்சராக நிர்மலா இருந்துவருகிறார். அவர் தனது முதன் பட்ஜெட்டை நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வரி வசூல் தொடர்பாக தமிழ் சங்க இலங்கிய நூல்களில் ஒன்றான பிசிராந்தையாரின் புறநாநாறு  பாடல்வரிகளை அழகாக வாசித்து, அதற்கு  ஆங்கிலத்தில் விவரமாக விளக்கம் அளித்தும் பேசி, தமிழக எம்.பி.க்கள் உள்பட அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்றார்.

‘காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே பரிவுதப எடுக்கம் பிண்டம் நச்சின், அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே’ என்ற இந்த புறநானூற்றுப் பாடலை பாடினார்.

யானையின் பசிக்கு சிறிய அளவு நிலத்தில் இருந்து அறுவடை செய்த அரசியே போதுமானது. யானையை நிலத்திற்குள் அனுமதித்தால் அது நிலத்தில் உள்ள மொத்த பயிரையும் பாழாக்கி விடும் என்பது இதன் அர்த்தமாகும்.

அதிக வரிவசூல் செய்ய பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு உணர்த்த பிசிராந்தையார் இந்த பாடலை பாடி மன்னனின் தவறை உணரச் செய்தார்.

அதை மேற்கோள் காட்டி, ஒரு அரசாங்கம் தனது குடிமக்களுக்கு அதிக வரி விதிப்பதன் மூலம் அழுத்தம் கொடுக்கக் கூடாது  என்றும்,  இந்த நேரத்தில், பிசிரந்தாயார் எழுதிய தமிழ் சங்க கால சகாப்தமான புராணனூருவின் ஒரு வரியில் நான் ஞானத்தைக் காண்கிறேன். ‘யன்னாய் புகுந்த நிலம்’ என்ற வசனம் மன்னர் பாண்டியன் அரிவுதாய் நம்பிக்கு ஒரு ஆலோசனையாகப் பாடப்பட்டது” என்று அமைச்சர் கூறினார்.

ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு பட்ஜெட்டின்போது, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திருக்குறளில் ஒரு பாடலை குறிப்பிட்டு பேசி, பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில், நிர்மலா சீத்தாராமன் தனது பட்ஜெட்டில் சங்க இலக்கிய பாடலை குறிப்பிட்டு பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பட்ஜெட் உரையின்போது தமிழ் பேசப்பட்டதை தமிழக எம்.பி.க்கள் பெரிதும் வரவேற்றனர்.