சென்னை:

திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தனது அத்தையும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுக இளைஞர் அணி செயலாளராக திமுக தலைமை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினை கடந்த  4-ம் தேதி நியமித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, கழக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் உள்பட கழக மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழியின் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்குள்ள கருணாநிதியின் படத்தை வணங்கிவிட்டு, ராசாத்தி அம்மாள், கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில், இன்று திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம், சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அன்பகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.  இதுதொடர்பாக இளைஞரணி நிர்வாகிகளோடு, உதயநிதி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அது எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படும்” என்றார் உதயநிதி.