சென்னை,
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க தடை விதிக்க கோரி சசிகலாபுஷ்பா தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை அதிமுக கட்சி தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதிமுக சட்டவிதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பொதுச்செயலாளராக போட்டியிட முடியும். ஆனால் சசிகலா உறுப்பினராகி 5 ஆண்டுகள் ஆகவில்லை எனவே அவர் போட்யிட தடை விதிக்க வேண்டும் என சசிகலாபுஷ்பா ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
ஏற்கனவே விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சசிகலா புஷ்பாவின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி செய்தது.