வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 96,169 உயர்ந்து 34,00,090 ஆகி இதுவரை 2,39,566 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,169 பேர் அதிகரித்து மொத்தம் 34,00,090 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5742 அதிகரித்து மொத்தம் 2,39,448 பேர் உயிர் இழந்துள்ளனர்.  10,80,153 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  51,352 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,007 பேர் அதிகரித்து மொத்தம் 11,31,030 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1897 அதிகரித்து மொத்தம் 65,763 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,61,563  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,481 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3648 பேர் அதிகரித்து மொத்தம் 242,988 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 281 அதிகரித்து மொத்தம் 24,824 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,42,450 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2500  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1965 பேர் அதிகரித்து மொத்தம் 2,07,428 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 269 அதிகரித்து மொத்தம் 28,235 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 78,249 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1578 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 6201 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 17,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 739 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 27,510 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2394 பேர் அதிகரித்து மொத்தம் 37,257 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 69 அதிகரித்து மொத்தம் 1223  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 10,007 பேர் குணம் அடைந்துள்ளனர்.