திருவனந்தபுரம்

கேரளாவில் நேற்று ஆர் ஆர் எஸ் தொண்டர்  கொலை செய்யப்பட்டதை ஒட்டி அங்கு கடையடைப்பு நடந்துள்ளது.

கேரளாவில் சமீபகாலமாக ஆர் எஸ் எஸ் தொண்டர்களைத் தாக்குவதும், பா ஜ க கட்சியினரைத் தாக்குவதும் அதிகரித்துள்ளது.  நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் ஆர் எஸ் எஸ் தொண்டர் ராஜேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.  34 வயதான இவரது இடது கை துண்டு துண்டாக வெட்டப் பட்டுள்ளதாக போலீஸ் அறிவிப்பு தெரிவிக்கிறது.

இதற்கு காரணம் யார் என இன்னும் அறியப்படாத நிலையில் பா ஜ க வினர் இடது சாரிகளை குற்றம் சாட்டியுள்ளனர்.  இடது சாரியினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பா ஜ க வின் கேரள தலைமை ராஜேஷின் கொலையை கண்டிக்கும் வகையில் இன்று கடையடைப்பு நடத்தி வருகிறது.  இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிக அளவில் கடைகளும், முழு அளவில் அலுவலகங்களும் இயங்காததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.