4
டில்லி: கொச்சியில் இருந்து பெங்களருவுக்கு குழாயில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்துகிறது. தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.  அங்கு கெயில் பணியை தொடரலாம் என்று தீப்பானது.  இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. தேமுதிக மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்கள் சேர்த்து விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இருப்பினும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிரான சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று  உச்ச நீதிமன்ற தாக்கூர் பெஞ்ச் அறிவித்து, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, கெயில் நிறுவனம், தமிழகம் வழியாக எரிவாயு குழாய்களை அமைக்கும் பணி தொடரும் என்பது உறுதியாகிவிட்டது.