குற்றாலம்

நேற்று முன்தினம் மாலை குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கின் வீடியோ வெளியாகி உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும்.  இதை அனுபவிப்பதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.   தற்போது வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்த காரணமாகப் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து வரத் துவங்கியது.

எனவே இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.   நேற்று முன் தினம் மாலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் பிரதான அருவியான குற்றால பிரதானம் அருவியில் திடீரென தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அருவியில் குளித்துக்கொண்டிருந்த இரு பெண்களில் இருவர் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்பு துறையினர் இவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது உடலை மீட்டனர். தற்போது குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நமது வாசகர்களுக்காக வெள்ளக்கட்சியின் வீடியோ பதிவு