
தேமுதிக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் திணேஷ் திமுகவில் இணைந்தார். இதையடுத்து குமரி கிழக்கு மாவட்ட செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, அவரே மேற்கு மாவட்ட பொறுப்பாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜெகநாதன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக இன்று (01.04.2016) முதல் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் மாவட்டடத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel