சென்னை கொடுங்கையூர் எம்ஆர்நகர், முத்தமிழ் நகர் சந்திப்பில், கட்டப்பட்டுள்ள தேவாலயம், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருப்பதாகவும், இந்து கோவில்களை இடிக்கும் தமிழகஅரசு, இந்த கிறிஸ்தவ கோவிலையும் அகற்ற வேண்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களிள் பரவியது. இந்த வீடியோவை பாஜக உறுப்பினர் சவுதாமணி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது வைரலானது.
இதையடுத்து, அவர்மீது சிலர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அரசுக்கு எதிராக கலகம் செய்யத் தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, சவுதாமணி தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ் சவுதாமணி மீதான புகார் தொடர்பாக, மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும், சவுதாமணி பதிவிட்ட வீடியோ மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி , காவல்துறை சவுதாமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளதால் அந்த வழக்கை எதிர்த்து வேண்டுமென்றால் புதிய மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்த நீதிபதி, தற்போது புகாரின் அடிப்படையில் சவுதாமணியின் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.