banner1

மதுரை மாவட்டம் மேலூர்
,ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது 85க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி அரசு தரப்பில் முதன் முதலில் தாக்கல் செய்த 2 வழக்குகளை தள்ளுபடி செய்தும் அந்த வழக்கில் தொடர்புடைய பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை செய்தும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி மகேந்திரபூபதி உத்தரவிட்944330_10153738305333303_7329289640362235029_nடார். மேலும் வழக்கை தாக்கல் செய்த கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மற்றும் அரசு வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மேலூர் கோர்ட்டுக்கு சென்று ஆவணங்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி விசாரணைக்கு பிறகு மேலூர் மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதிசஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட விரைவு கோர்ட்டு 2வது நீதிபதி பாரதிராஜா மேலூர்  குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாக பதவி ஏற்றுக் கொண்டார்.