k2

நாயகி ஒரு குடும்ப தலைவி. இரு குழந்தைகளுக்கு தாய்.வாழ்க்கை என்னும்

கரடுமுரடான பாதையில் நடந்து… நடந்து… இளைப்பாற அமர்ந்த மரத்தடி தான்

face book. நிழலுக்கு அமர்ந்த இடமே அவள் நிம்மதியை இழக்க காரணமாய்

அமையப்போகிறது என்று அப்போது அவளுக்கு தெரியாது. அவளுக்கு நட்பு

வட்டம் பெருசா இல்ல. அவளுக்கு நெருக்கமாய் ஒரே ஒரு தோழி. நாயகிக்கு

பெரிய படிப்பு இல்லை. அவள் படித்து எல்லாம் வாழ்க்கை கல்வியை

மட்டுமே.எதோ ஆர்வத்தில் face book உள் வந்தாலும் தன் தோழியை தவிர

யாரையும் add பண்ணாமல் just மதத்தவர்கள் எழுதும் தமிழ் பதிவுகளை மட்டும்

படித்தல் சில நாட்கள். அப்போது ஒரு frd req வருது. அது ஒரு ஆண் id என்பதால்

நிறைய தயங்கி அந்த id யில் இருந்த பதிவுகளை படித்து கொஞ்சம் நம்பிக்கை வர

add பண்ணுகிறாள். உடனே ஒரு msg வருது.

Hi

அதோ ஆர்வத்தில் இவள் hi ன்னு சொல்ல

தொடர்ந்து சில கேள்விகள் சில பதில்கள் பொதுவாய் மட்டுமே.இது புதிதாய்

இருக்க, ஒரு நாள் இரவு ஆன் லைனில் இருக்கும் அந்த அந்த நபரை இவளே hi

சொல்ல (இவளோட id ல தோழி , அந்த id மட்டுமே அப்போது ) உடனே பதிலாய்

தூங்கலையா !?

இல்ல

உங்க ஹஸ்பென்ட் எங்க ?

தூங்குறார்

கூப்பிடலையா

எதுக்கு

அதுக்கு தான் !

ஏதோ தப்பாய் தோண

Hello என்று கோவமாய் msg பண்ணுகிறாள்.

Sollu

எந்த பதிலும் கொடுக்காமல் ஏதோ படித்துகொண்டு இருந்தாள்.

மீண்டும் hi

பதில் தர விரும்பாமல் அமைதியாக இருக்கிறாள்.

Oye

sorry சும்மா தான் கேட்டேன்

Good night

அடுத்த நாள் fb வந்த போது

காலையிலேயே ஒரு good morning காத்திருந்தது.

மரியாதை நிமித்தமாய் gud mrng சொல்ல

மீண்டும் sorry msg

அந்த இருவரை தவிர யாரையும் add பண்ணாததால் அடுத்தடுத்து mag

மரியாதையாகவும், அன்பாகவும் இருக்க. msg பண்ணுகிறாள். அந்த நபர் fb ல

எப்படி நபர்கள் இருப்பார்கள், எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும். போன்ற

அறிவுரைகள். மற்றும் நம்பகமானவர்களாக சிலரை அறிமுகம் படுத்த அவர்களும்

பொண்ணாய் இருந்ததால் ஒரு நல்ல நம்பிகையான நண்பனாகவே பார்க்கிறாள்

நாயகி.