uma22

 

 

 

 

 

ஸ்ரீ சொல்ல ஆரம்பிகிறாள்.
”  சென்னை வந்ததே இவனை மீட் பண்ண தான் அது தெரியுமா உனக்கு !” ஸ்ரீ கேட்க
” அவங்க frd ஆகிசிடெண்ட் ஆகி இங்கே அட்மிட் ஆகியிருந்தாங்களே அவங்களை பார்க்க வந்தாதானே…” இடைமறிக்கும் ஸ்ரீ.
” ம்க்கும்… நினைசுகிட்டுயிரு ”
” எனக்கு என்ன தெரியும் ஸ்ரீ இவன் தானே அப்படி சொன்னான் !”
” ஆமா இவனும் அவங்களும் போய் அந்த அம்மாவை பார்த்ததும் உண்மை தான். ஆனா இவங்க ரெண்டு பேரும் மட்டும் இல்ல மூணாவதா ஒருத்தவங்க இருந்தாங்க தெரியுமா !?”
” தெரியும் அபிநயா தானே ! சொன்னானே !”
” அதுக்கப்பறம் அபிநயா வீட்ல ஒரு மீட்டிங் நடந்திருக்கு உனக்கு தெரியுமா !?” ஸ்ரீ கேட்க, தெரியாது என்று தலையசைக்கிறார்.
” சரி விடு ஸ்ரீ ஆல்ரெடி அபியும் உங்க aundy யும் frds so அவங்க வீட்டுக்கு போயிருக்கலாம் அதுல என்ன இருக்கு !” என்கிறாள் நாயகி.
” Frd ah !? loosu அபியை பத்தி அவ்வளவு எனக்கு அவங்க தான் சொன்னாங்க உன்கிட்ட கூட சொன்னேனே ! அதுக்கு காரணம் என்னனு தெரியுமா !?” ஸ்ரீ கேட்க நாயகி
” அம்மாதாயே ஒரு எழவும் புரியல குழப்பாம தெளிவா சொல்லி தொல…” கடுப்பாகும் நாயகியிடம்
” சொல்லவே அருவருப்பா இருக்கு அவனை இவங்க தனியா…
அதுக்கு அபி இடம் கொடுக்கலை போதுமா !?” சொல்லிமுடிக்கும் முன்
“ச்சீ… என் ஸ்ரீ இப்படி சொல்ற !?”
” ஆமா இதை அவங்களே சொன்னப்போ எனக்கு இப்படி தான் அசிங்கமா இருந்தது. ” என்கிறாள் ஸ்ரீ
” என்ன சொல்ற ஸ்ரீ !!!? அவங்களே சொன்னாங்களா !?”
” ஆமா அபி வீட்டுக்கு போனப்போ இவன் வர்றேன்னு சொல்லியிருந்தானாம் அபியும் அவனுக்கு மட்டன் பிடிக்கும் நீங்க சாப்பிடுவீங்களான்னு கேட்டிருக்காங்க நான் எல்லா சாப்பிடுவேன்னு சொல்லவும் வீட்ல யாரும் இல்ல நீங்க டையர்டா இருக்கீங்க ரெஸ்ட் எடுங்க நான் போயிட்டு வாங்கிட்டு வர்றேன்னு நல்லா தான் அபி பேசிகிட்டு இருந்ததாம் அபி கடைக்கு கிளம்பும் போது இவன் வந்துட்டானாம் உடனே இவங்க ரெண்டு போரையும் தனியா விட்டுட்டு போக அபிக்கு மனசு இல்லையாம்… ” ஸ்ரீ சொல்ல சொல்லு தலையில் அடித்துகொல்கிறாள் நாயகி.
” கருமம் ” என்று
” முழுசா கேளு. வேற வழியில்லாம அவசர அவசரமா போய் மட்டனுக்கு பதில் மீன் வாங்கிட்டு வந்தாமா அவ மட்டன் கடை தூரம் மீன் கடை பக்கமாம் எனகளுக்குள்ள ப்ரைவசி இருக்க கூடாதுன்னு அப்படி பண்ணினான்னு என்கிட்டே aundy சொன்னப்போ எனக்கே இதேட சொந்தேன்னு சொல்லிக்க அசிங்கமா இருந்தது. ” ஸ்ரீ சொல்லிமுடிக்க
” இதையும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லமா உன்கிட்டயும் சொன்னாங்களா ஸ்ரீ !?”
” ம்… ”
நாயகிக்கு நம்பவும் முடியல நம்பாமல் இருக்கவும் முடியல சொல்வது பத்மினியின் சொந்தகாரியான ஸ்ரீ.
அதிர்ச்சியில் உறைந்தே போகிறாள் நாயகி காரணம் பத்மினியின் வயது பேரகுழந்தைகள் இருக்கும் ஒரு பெண்மணி கேவலம் மகன் வயதில் இருக்கும் ஒருவனை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.
எதுவும் பேசமால் அமைதியாய் அமர்ந்திருக்கும் நாயகியை ஸ்ரீ
” என்ன அமைதியா இருக்க ?”
” என்ன சொல்றதுன்னு தெரியல ஸ்ரீ !”
” ராசா சரியா தான் சொல்லுச்சு உங்க aundy க்கு பொறமைன்னு, அதான் எங்க அம்மா கிட்டயே தப்பா சொல்லியிருக்கு ச்ச… ” எரிச்சலோடு பேசு ஸ்ரீயிடம் நாயகி
“நீ எப்போ ஸ்ரீ அவன் கிட்ட பேசின கால் பண்ணினானா ”
” இல்ல chat ல தான் ”
” chat லயா ! உன்னோட idல தான் block பண்ணிடையே !  அப்பறம் எப்படி !!?” நாயகி கேட்க
” Sanjana San id ல பேசினேன் ”
” ஓ… “( ஒரு முறை நாயகனை சும்மா கலாயக்க நாயகியும் ஸ்ரீ யும் ஆளுக்கு ஒரு fake id கிரியேட் பண்ணி நாயகனால் கண்டுபிடிக்க பட்டவுடம் அப்படியே use பண்ணாமல் விட்டிருந்தனர் இருவரும் அதில் Sanjana San ஸ்ரீயோடது )
” அதையும் கண்டுபிடிச்சுடுச்சு அதனால் தான் அம்மா கிட்ட போட்டுகொடுத்திருக்கு அந்த idயும் இப்போ block ” ஸ்ரீ வருத்தமாக சொல்லுகிறாள்.
” இது அவங்களுக்கு எப்படி தெரியும் ஸ்ரீ !!??”
” அதான் 24 மணி நேரமும் அவனோட டைம் லைனை தான நோண்டுது ! இந்த id ல நீயும் அவனும் மட்டும் தான் friend so ஈசியா கண்டுபிடிசிருச்சு ”
” ம்ம் ”
” ஆமா உன்னோட fake id ய என்ன பண்ணின டியட்டிவேட் பண்ணிடீயா !?  ” ஸ்ரீ ஆர்வத்தோடு கேட்க
” இல்ல ஸ்ரீ அப்படியே விட்டுட்டேன் use பண்றதில்ல ”
” அதுல எத்தனை frds இருக்காங்க!?”
” தெரியல ஸ்ரீ அப்போ ஏதோ கொஞ்சபேரை add பண்ணினேன் நியாபகம் இல்ல ”
” பாஸ் வேர்டு டாவது நியாபகம் இருக்கா உனக்கு ” ஸ்ரீ என்ன எதிர்பார்கிறாள் என்பது புரிகிறது நாயகிக்கு.
” எதுலையோ எழுதி வச்சேன். இருக்கும் பார்த்து சொல்றேன் ஸ்ரீ ”
” thanks ” என்கிறாள் ஸ்ரீ சந்தோசமாக.
தப்புன்னு தெரிந்தாலும் நாயகியால் ஒன்றும் பேசமுடியாமல் போக காரணம் ஒரு நெருக்கடியான சூழலில் நாயகியின் கணவர் மருத்துவ செலவுக்கு ஸ்ரீயின் கணவர் செய்த பணவுதவி. ஸ்ரீயின் தவறுகள் தெரிந்தாலும் தட்டிகேட்க முடியாமல் தவிக்கிறாள் நாயகி.
செஞ்சோற்று கடனுக்காக சேராத இடம் சேர்ந்த கர்ணன் போல.

 

(தொடர்ச்சி… வரும் சனிக்கிழமை)