சென்னை,
மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட அனுமதி அளிக்கமாட்டோம் என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 17ந்தேதி விசாரணை யின்போது, தமிழகத்திற்கு பாதிப்பில்லாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாம் என உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்தது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில், மேற்பார்வை குழு அமைத்து மேகதாது வில் அணை கட்டும் பணியை கண்காணிக்கலாம் என்றும், மேற்பார்வை குழு அமைக்கும் பட்சத்தில் பராமரிப்பு பணிகளில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் கூறியது.
இதற்கு தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், இசைவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.
இதற்கு தமிழக கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத்தொடர்ந்து விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் உச்சநீதி மன்றத்தில் இசைவு தெரிவித்ததாக வந்த செய்திகள் உண்மைக்கு மாறானது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சமதள நிலப்பரப்பின் காரணமாக புதிய அணை கட்டுவது இயலாது என்பதாலும், காவிரி நடுவர் நடுவர் மன்ற இறுதியாணையை சுட்டிக்காட்டி மிகையான நீரினை தற்போதுள்ள அணையிலேயே சேமித்து வைத்து அனைத்து சம்பந்தப்பட்ட மாநிலங்களும் உரிய பங்கினை பெற்றுக்கொள்ள குறிப்பிடப்பட்டுள்ளது என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும், இதுகுறித்து தமிழக அரசின் வழக்கறிஞர் இது குறித்து தனியாக வாதிடப்பட்டும் என பதிலளித்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் கூறியதாக வந்த பத்திரிக்கை செய்தி உண்மைக்கு மாறானது என்றும், உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும்போது தமிழகத்தின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்படும். எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்கு எதிராக கர்நாடக அரசு அணை கட்ட புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது’என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட அனுமதி அளிக்கமாட்டோம் என்று உச்சநீதி மன்றத்தில் கூறி உள்ளார்.