வரும் ஏழாம் தேதி கமல் பிறந்ததினம் வருவதை ஒட்டியும், அவரது மகள் ஸ்ருதிஹாசன் நடித்த புலி திரைப்படம் இன்று வெளியாவதாலும் ஒரே போஸ்டரில் டபுள் மேட்டர் போட்டு கலக்கியிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்.
என்றாலும், “அக்டோபர் 2 காந்தி காந்தி ஜெயந்தி: அக்டோபர் 7 கமல் ஜெயந்தி” என்ற வாசகம் ஓவர்!
அதோடு, இன்று வெளியாகும் புலி திரைப்படம், கலைராணி ஸ்ருதிஹாசனுக்கு மேலும் (!) ஒரு மைல் கல்லாக திகழவும் வாழ்த்தியிருக்கிறார்கள்.
உங்க பாச வெறிக்கு அளவே இல்லையா பாஸ்!
(படத்தில் கீழே, கத்துகுட்டி என்பது இன்று வெளியாக இருந்து, “புலி”யைப் பார்த்து பதுங்கி ஒதுங்கிய திரைப்படம். அந்த தி.ப. போஸ்டரின் மேல் , கமல் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். நம்ம கமெண்ட் இல்லே! )
Patrikai.com official YouTube Channel
