திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கழிவறையை திறக்க கோரி பொதுமக்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் திறக்கப்படவில்லை. வாரம் தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு கொடுக்க மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். மனு கொடுக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் இயற்கை உபாதைகளுக்கு மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே கழிவறை கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் மூடியே இருந்தது. கழிவறை இல்லாததால் பெண்கள் மறைவான இடத்தை நோக்கி செல்லும் அவலம் ஏற்பட்டது.
இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும், கட்சி தலைவர்கள் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கலெக்டரிடம் கொடுத்த மனுவின் நகலை கழிவறை கதவில் ஒட்டினர்.. இதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக கழிவறையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட்டனர். கழிவறை கதவில் ஒட்டபட்ட மனுமீது உடடின நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் வியந்தனர்.