டெல்லி

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம்  சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2001 – 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் வருவாய்த்துறை அமைச்சராகவும், சில மாதங்கள் முதல்வராகவும் இருந்தார் அவர் தனது பதவிக்காலத்தில்  வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை மனு ஒன்றை தாக்கல் செய்தை ஏற்று வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கை மீண்டும் மறுஆய்வுக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஓபிஎஸ் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்கவும், மதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு அதன் விசாரணையை மாற்றியும் ஆணையிட்டார்.

மறு விசாரணைக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமனத்தில்தாக்கல் செய்தமனு நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டில் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தின் அதிகாரத்தை உயர்நீதிமன்ற, எடுத்துக்கொண்டு குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது என்று கூறி, இதர்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர

[youtube-feed feed=1]