சென்னை
அமைச்சர் சிவசங்கர் விரைவில் தமிழகத்தில் இயக்கப்படும் பழைய பேருந்துகள் மாற்றப்படும் என அறிவித்துள்ளார்.
நேற்று சட்டசபையில் மானாமதுரை தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழரசி,
“கடந்த ஆட்சியில் பழுதடைந்த அரசு பேருந்துகள் எல்லாம் எனது தொகுதியைச் சுற்றிலும் இயக்கப்படுகின்றன. அந்த பழுதடைந்த பஸ்களுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”
எனப் பேசினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இதற்கு,
‘போக்குவரத்துத் துறைக்கு புத்துயிர் ஊட்டுகின்ற வகையில் முதல்வர், ஒவ்வொரு வருடமும் புதிய பேருந்துகளை வாங்க அறிவிப்பு கொடுத்து, அதற்கான டெண்டர் விடப்பட்டு,
தற்போது தமிழ்நாடு முழுவதும் 3,500 பேருந்துகள் மக்களுடைய பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. மீதி பேருந்துகள் படிப்படியாக தயாரிக்கப்பட்டு, கூடு கட்டும் பணி முடிவு பெற்று வந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரத்திலும் புதிய, புதிய பேருந்துகள் வந்து கொண்டிருக்கின்றன. பழைய பேருந்துகள் அவற்றின் மூலமாக மாற்றி இயக்கப்படும்’
என்று பதில் அளித்துள்ளார்.