டில்லி

கொரோனா நோயாளிகளுக்காக ஒரு லட்சம் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முன் வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது.

அகில உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள்து.

தற்போது சிகிச்சையில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.

இவர்களுக்கு சிகிச்சைக்குத் தேவையான அனைத்தும் தயாராக உள்ளதாக ஊடகங்கள் மூலம் அரசு தெரிவிக்கின்றது.

இந்நிலையில் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து 1 லட்சம் மெட்ரிக் டன் ஆக்சிஜனுக்கு சர்வதேச அளவில் விலைப்பட்டியல் கோரி உள்ளது.

இதற்கு காரணம்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெறுவோர்க்கு அதிக அளவில் ஆக்சிஜன் தேவை எனக் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து அரசு தரப்பில் ஊடகங்களுக்கு எவ்வித தகவலும் அளிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடதக்கதாகும்,