
ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி டி.பார்த்திபன் இயக்கத்தில் ‘நட்பே துணை’ படம் வரும் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோவாக ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார்.
இவர்களைத் தவிர கரு பழனியப்பன், பாண்டியராஜன் , ஹரிஷ் உத்தமன், ஆர் ஜே விக்னேஷ் காந்த், எருமை சாணி விஜய், அஜய் கோஸ், சுட்டி அரவிந்த், புட் சட்னி ராஜ்மோகன், பிஜிலி ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைக்க சுந்தர் சி யின் அவினி மூவிஸ் தயாரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி நட்பே துணை படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel