“ஏழை,நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வு சூறையாடப்படுவதால் மதுபானக்கடைகளை மூட வேண்டுமென பெண்கள் கோரிக்கை வைத்தனர்.அதன்படி வரும் ஏப்ரல் 1 2016 முதல் பூரண மதுவிலக்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும்.இதன்படி உள்நாட்டு மதுபானங்களுக்கான தடை உடனடியாக அமுலுக்கு வருகிறது
.எனினும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகைகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு நகரங்களில் மட்டும் கிடைக்கும்.அதன்பிறகு அதற்கும் தடை விதிக்கப்படும்.இந்தத் தடையைக் கண்காணிப்பதற்காக சிறப்பு தனிப்பிரிவு தொடங்கப்படும்.சட்ட விரோதமாக மது விற்றால்,அது குறித்து புகார் தெரிவிக்க சிறப்புப் பிரிவு தொடங்கப்படும்.
ஏப்ரல் 1 க்குப் பிறகும்,அரசால் தடை செய்யப்பட்ட பின்பும் மதுவகைகளை விற்றால்,அந்த மதுபான நிறுவனங்களை அழிக்க பெண்கள் தயங்கக் கூடாது.”
- இவ்வாறு அறிவித்துள்ள முதல்வர், மதுவின் கொடுமை குறித்து மக்களுக்கு விளக்கவும், மதுவிலக்கு குறித்து மக்களுக்கு தெரிவிக்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இது உண்மைதான். அதிர்ச்சி அடைய அடைய வேண்டாம்.. இப்படி அறிவித்துள்ளவர் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார்.
(தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமே இல்லை என்று முதல்வரின் குரலை, “மதுவிலக்குத்துறை” (!) அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சட்டசபையிலேயே அறிவித்து விட்டாரே!)