z
சென்னை:
மீபத்திய வெள்ளத்தில் சென்னை ராமாவரத்தில் இருக்கும், எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இது எம்.ஜி.ஆர். தொண்டர்களை மட்டுமின்றி, மூத்த திரையுல நட்சத்திரங்களின் மனதையும் பாதித்தது. ஆனால் அவர்கள் வெளிப்படையாக பேசத் தயங்கிய நிலையில், நடிகை சரோஜாதேவி மட்டும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“எம்.ஜி.ஆர். வீ்ட்டின் நிலையை அறிந்து கண்ணீர் விட்டேன். மனிதராக பிறந்து தெய்வமாக போனவர், அவர். அவருடைய வீட்டில் நான் உட்பட எத்தனையோ ஆயிரம் பேர் சாப்பிட்டிருக்கிறோம். எம்.ஜி.ஆர். மேல் பக்தி உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலே போதும்.. அந்த இடத்தை சோலையாக மாற்றிவிடலாம்” என்று கூறியிருந்தார்.
ஆனால் இன்றளவும் எம்.ஜி.ஆரின் இல்லம் சேறும் சகதியுமாகவே இருக்கிறது. இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தற்போது தனது வருத்தத்தையும், ஜெயலலிதா மீதான ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
.”ஜெயலலிதாவுக்கு இவ்வளவு அந்தஸ்தும், பவிசும் வருவதற்குக் காரணமே, அவரை அரசியலுக்கு அழைத்து வந்து கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கிய அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதாவும் அவருடைய அமைச்சர்களும் வெள்ள நிவாரணப் பணிகளை எப்படி ஆற்றினர் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். ஜெயலலிதாவுக்கு இவ்வளவு அந்தஸ்தும், பவிசும் வருவதற்குக் காரணமே, அவரை அரசியலுக்கு அழைத்து வந்து கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கிய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தான். அவர் வாழ்ந்த இராமாவரம் தோட்டம், இந்த வெள்ளத்திற்குப் பிறகு என்ன கதியில் இருக்கிறது தெரியுமா? குப்பைக்கூளமாகவே இருக்கிறது.
வெள்ளம் வற்றி ஒரு மாதமாகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கிறார். ஆனால் அவரை வாழ வைத்த எம்.ஜி.ஆர். வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டுமென்று கூட இவர்கள் நினைக்கவில்லை. மாறாக, எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகை சரோஜாதேவி, எம்.ஜி.ஆர். வீட்டைச் சுத்தம் செய்வது பற்றி அறிக்கை விடுகிறார் என்றால், இதைவிட வெட்கக் கேடு வேறு உண்டா? ஜெயலலிதாவைப் போல, பழைய நிகழ்வு களை மறந்து பாதகம் செய்வார் யாருமுண்டா?”

  • இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.