கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், உடுமலைப்பேட்டை சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேக மரணமாகவோ, கொலையோ செய்யப்பட்டு உயிரிழந்தால், விசாரணை செய்து காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, அதற்கு சாதி ஆணவக் கொலை என பெயர்சூட்டப்படுவதன் நோக்கம் என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மரணம் நிகழ்ந்தவுடன், அதற்கு அரசு தரும் நிதியில், 20 சதவிகிதத்தை மட்டும் உயிரிழந்தவரின் வீட்டிற்கு கொடுத்துவிட்டு, 80 சதவீத பணத்தை, மரணம் தொடர்பாக போராட்டம் நடத்திய கும்பல் பறித்துச் சென்றுவிடுவதாகவும், யுவராஜ் குற்றம்சாட்டியுள்ளார்…