தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர்.
அவ்வப்போது வெளிநாடு சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் என விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று மகளிர் தினத்தையொட்டி நயன்தாராவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன்
நீ என் உலக அழகியே.. உன்னைப் போல் ஒருத்தி இல்லையே.. இனிய மகளிர் தின வாழ்த்துகள். வலிமையான மகளிர்க்கு. மற்றவர்களைவிட தன் மீதான நம்பிக்கையை அதிகமாகக் கொண்டிருக்கும் பெண்களே, நீங்கள்தான் இந்த சுற்றுச்சூழலை அழகாக மிளிரச் செய்கிறீர்கள். நன்றி. அத்தகைய பெண்கள் மீது அன்புகொண்டு மரியாதை செலுத்தி இந்த உலகை எல்லாப் பெண்களுக்குமான சிறந்த இடமாக ஒன்றிணைந்து மாற்றுவோம் என பதிவு செய்துள்ளார்