சென்னை

மிழக அமைச்சர் மதிவேந்தன் ஈஷா யோகா மையம் மற்றும் யானை வழித்தடம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று தமிழக சட்டசபையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் முன்வைத்த விவாதத்திற்கு அந்தத் துறையின் அமைச்சர் மதிவேந்தன் பதிலளித்து பேசினார்

அப்போது அமைச்சர்,

”யானை வழித்தடங்கள் என்றால், யானை வாழ்விடங்களை இணைப்பதற்காக யானைகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் தடங்கள் என்று குறிப்பிடலாம்.வனப்பகுதிகள் இடைவெளியின்றி தொடர்ச்சியாகக் காணப்பட்ட காலத்தில் யானைகளின் நடமாட்டம், வனத்துக்குள்ளேயே இருந்து வந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கன்னியாகுமரி தொடங்கி கிருஷ்ணகிரி வரை உள்ள வனப்பகுதிகள், இடைவெளி இல்லாத பரந்து விரிந்து இருந்த காலங்களில் யானைகளால் விவசாயிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் தொந்தரவுகள் இருந்ததே இல்லை.

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட விவசாய நிலங்களின் விரிவாக்கம் மற்றும் பல்வேறு கிராம மேம்பாட்டு பணிகள் நடந்த பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி பாதிப்படைந்துள்ளது. தமிழ்நாட்டின் வனப்பகுதியில் காணப்படும் யானைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

யானை வழித்தடங்கள் பற்றி பொதுவாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஈஷா பற்றிய முழு விவரங்களை தெரிந்த பிறகுதான் நான் பதில் சொல்ல முடியும். தெரியாமல் அறைகுறையாக நான் எதையும் சொல்லக்கூடாது. அதுபற்றி ஆய்வு செய்த பிறகுதான் விதி முறைகளை மீறியிருக்கிறார்களா? தேவையான அனுமதியை பெற்றுள்ளார்களா? என்பதை பார்த்துவிட்டு விளக்கம் அளிக்கிறேன்”

என்று கூறினார்.