ms

 

இசையரசி என்று போற்றப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு இதே நாளில்தான் மறைந்தார்.

புகழ் பெற்ற பாடகியாகவும், திரைப்பட நடிகையாகவும் விளங்கிய அவருக்கு அவரதது தாயாரே குருவாக இருந்து இசை கற்பித்தார்.

எம். எஸ்ஸின் குரல் அனைவரையும் கவர்ந்தது. இந்தியில் வெளியான  மீரா திரைப்டத்தில் அவரது குரலைக் கேட்டு ரசித்த  ஜவஹர்லால் நேரு, “இசையின் ராணிக்கு முன்னால், நான் சாதாரண பிரதமர்” என புகழ் மாலை சூடினார்.

சுதந்திர போராட்டத்திலும் தனது பங்களிப்பை செலுத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சேவையைப் பாராட்டி, பாரத் ரத்னா, பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, மக்சேசே, சங்கீத கலாநிதி, இசைப்பேரறிஞர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள்  அளிக்கப்பட்டன.  காற்றினிலே வரும் கீதம், குறையொன்றுமில்லை.. என அவரது பல பாடல்கள் சாகாவரம் பெற்றவை.