ஜாகீர் உசேன்
ஜாகீர் உசேன்  பிறந்தநாள் (1897)
இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக,  1967 இல் இருந்து 1969 வரை (இறக்கும் வரை) பதவி வகித்தவர் ஜாகீர் உசேன்.  அதற்கு முன்பாக ஐந்தாண்டு காலம்  துணை குடியரசுத் தலைவராக  இருந்தார்.
கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிர்வாகியாகவும் விளங்கினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற இவர், பிறகு,  ஜெர்மனி தலைநகரான  பெர்லினில் உள்ள பல்கலைக் கழகத்தில்  உயர்கல்வி கற்றார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, , காந்தியடிகளின் அகிம்சை கொள்கை மீது தீவிர ஈடுபாடு கொண்டார்.  காந்தியடிகளின் ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்தது. பின்னாளில் ஆதாரக் கல்விமுறையினை நாடெங்கும் பரப்ப அரும்பாடுபட்டார்.
இந்திய அரசின் உயர்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்து ,உயர்நிலைக் கல்விச் சீர்திருத்தத்திற்கான பலதிட்டங்களை வகுத்துக் கொடுத்தார். சர்வதேசக் கல்வி நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்பு கொண்டிருந்த இவர், யுனெஸ்கோ நிர்வாக வாரியத்தின் உறுப்பினராக  பணியாற்றினார்.
ஆங்கிலம் இந்தி, உருது ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர்,  சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். இம்மூன்று மொழிகளிலும் ஆதாரக்கல்வி முறை குறித்தும் கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்களை  எழுதியுள்ளார். பிளேட்டோவின் குடியரசு என்ற நூலை உருது மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளார்.  3 மே 1969 மறைந்தார்.
Jpriestley
 
ஜோசப் பிரிசிட்லி  நினைவு நாள் (1804)
ஆங்கிலேய வேதியியல் அறிஞரான ஜோசப் பிரிசிட்லி, பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். ஆக்சிஜன் என்ற வாயுவை கண்டு பிடித்தவர் இவர்தான்.  கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு)  பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை.    சிறந்த விஞ்ஞானியாக மட்டுமின்றி, சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் விளங்கினார்.