தேவநேயபாவாணர்
தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் (1902)
மிகச்சிறந்த தமிழறிஞராக விளங்கிய தேவநேய பாவாணர், நாற்பதுக்கும் மேற்பட்ட  நூல்களை இயற்றியுள்ளார்.  நுண்ணிய  சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு வேராக இருந்தவர். .
“ உலக மொழிகளில் தமிழே மூத்த மொழி. மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது.  திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி.  கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளுக்கு  தன் சொற்கள் பலவற்றை அளித்தது தமிழ்” என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். இவர், ஜனவரி 15, 1981 அன்று மறைந்தார்.
download
 
தவக்குல் கர்மான்  பிறந்தநாள் (1979)
ஏமன் நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவரான தவக்குல் கர்மான், மனித உரிமை மீறல்களை எதிர்த்து போராடுபவர்.   ஏமனில் பிரபலமாக உள்ள  அல்-இசுலா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.  கடந்த 2005ஆம் ஆண்டுசங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக பொறுப்பேற்று மனித உரிமை மீறல்களை  எதிர்த்து போராடி வருகிறார்.
எல்லன் ஜான்சன் சர்லீஃப் மற்றும் லேமா குபோவி ஆகியோரோடு இவருக்கும் சேர்த்து, 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.