download (1)
எம். பக்தவத்சலம்  நினைவு நாள்(1987)
தமிழகத்தன்  முன்னாள் முதலமைச்சரான பக்தவச்சலம், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர்.  அமராவது சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வருவாயில் இருந்து து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர் இவர்தான்.
 
download
நாகேஷ்  நினைவு நாள் (2009)
நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும்  சாதனை  படைத்த நாகேஷ். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர். .
நடிப்பார்வத்தால்  சிறு வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து வந்தார். 1959 ஆம் ஆண்டில்  தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கால்பதித்தார். தொடர்ந்து  சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். . ஸ்ரீதர் இயக்கிய  காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில்  நடிக்க…  அதன் பிறகு புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
சர்வர் சுந்தரம் படத்தில் பிரதான வேடம் .  திருவிளையாடல் படத்தில் தருமி , தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி  என்று பல படங்களில் இவரது பாத்திரங்கள் தனி்த்துவம் பெற்று விளங்கின.  .சிவாஜி கணேசன், எம்ஜிஆர்  போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழ்த்திரையுலக வரலாற்றிலம் மறக்க முடியாத நடிகர், நாகேஷ்.
images
 
 
நவூறு சுதந்திரதினம்
உலகின் இரண்டாவது சிறிய நாடான, நவூறு சுந்திரமடைந்த தினம் இன்று.
தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள இந்த நாட்டின் பரப்பளவு 21 சதுர கிலோமீட்டர்தான்.   மக்கள் தொகை சுமார் 9000 மட்டுமே.   நவூரு குடியரசு (என்றும் பொதுவாக இனிமையான தீவு எனவும் அழைக்கப்படுகிறது.
நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு மிக்க குறைவான மக்கள் தொகை கொண்ட இனங்களுக்கும் சம உரிமை அளிக்கப்படுகிறது இங்கு.
மேலும், நவூருவில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய  விசயம் உண்டு. சுற்றுலா துறையால் பெரும் வருமானம் ஈட்டி, பணக்கார நாடாக இருந்தவு நவூரு. இங்கு
பாஸ்பேட் பாறைகள்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சுரங்கத்தொழில் பரவியது. அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, சுற்றுலா வருமானம் குறைந்தது.  ஏழை நாடானது நவூரு.