எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் பிறந்த நாள்
தமிழகத்தில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ( மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) பிறந்தநாள் இன்று.
தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். பிறகு சதி லீலாவது என்ற படத்தின் மூலம் திரைப்பட நாயகன் ஆனார்.  மெல்ல மெல்ல பிரபலம் அடைந்து… இதுதான் உச்சம் என்கிற அளவுக்கு புகழின் உச்சிக்குச் சென்றார். மக்கள் கொண்டாடினார்கள்.
ஆரம்பம் முதலே அரசியலிலும் நாட்டம் கொண்டிருந்தார். துவக்க காலத்தில்  காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று காங்கிரசில் இணைந்தார். பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளால் கவரப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அண்ணாவின் மறைவுக்குப்பிறகு , கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.  தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை பரவலாக அறிமுகப்படுத்தியவர். உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.
பெஞ்சமின் பிராங்கிளின்
பெஞ்சமின் பிராங்கிளின்

பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த நாள் ( 1706 )
பெஞ்சமின் பிராங்கிளின் ஒரு விஞ்ஞானி என்பதே பலருக்குத் தெரியும். ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள்  இவரும் ஒருவர் என்பது பலருக்கும் தெரியாது.
வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர்; இளம் வயதில் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.
‘Poor Richard’s Almanack’ என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர்.
அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.