kohli
டி-20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியும், அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது. மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு தொடங்கியது. மேலும் அணிக்கு தலா 2 ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
18 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் நெக்ரா, பும்ரா, பாண்டியா, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். இதையடுத்து பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளித்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா.
இந்திய அணியின் வெற்றிக்கு தூண் போல் நின்ற கோலி 37 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். ஆட்டநாயகனாகவும் வீராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.