A couple sits on the seafront on the eve of Valentine's Day in Mumbai February 13, 2009. Security has been tightened in several Indian cities after threats by right-wing groups to disrupt Valentine Day celebrations, local media reported. REUTERS/Arko Datta (INDIA)

வாத்ஸ்யானரின் காம சூத்திரா பிறந்த தேசம் இந்தியா. அதை நிரூபிக்கும் வகையில் உலகியேலே மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. விரைவில் முதலிடத்தை பெறும் என்றும் நம்பப்படுகிறது. “இந்தியர்கள் 6 வினாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் குறித்து சிந்திக்கிறார்கள்” என்று ஒரு கருத்தும் உண்டு.

ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் “அதெல்லாம் பழம் “பெருமை” (!) இப்போதெல்லாம் இந்தியர்கள் எட்டு நாட்களுக்கு ஒரு  முறை தான் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்” என்ற அதிர்ச்சி சர்வே வெளியாகியிருக்கிறது.

ஏற்கெனவே 2013ல் ஒரு ஆங்கில இதழ் நடத்திய சர்வேயில், “ஏழு நாட்களுக்கு ஒரு முறை செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள்” என்றது ஆய்வு.. இப்போது அது எட்டு நாட்களாகியிருக்கிறது!

ஆனால் இது நமக்குப் பெருமைதான். ஏனென்றால், பல நாடுகளில், செக்ஸூக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தவிர, வயது வந்த பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில் கூட்டுக்குடும்பம் இருக்கிறது. அதாவது தாய் தந்தையுடன் பிள்ளைகள் வாழ்வதைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்கள்!

ஆகவே, தங்களது செக்ஸ் தேவை பற்றி ஆணோ பெண்ணோ பெரும்பாலும் யோசிப்பதில்லை. தங்களது பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களுக்கான பொருள் சேர்ப்பது குறித்தே சிந்திக்கிறார்கள். அதற்காகவே உழைக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

அதே போல ஆகப்பெரும்பாலானவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில் இங்கே வாழ்கிறார்கள்.  இதற்குக் காரணமும், மூதாதையர்களின் பாரம்பரியமும், குழந்தைகள் மீதான பிரியமும்தான்!

பதினெட்டில் இருந்து முப்பத்தியைந்து வரையிலான ஆண்களுக்கும், பதினேழில் இருந்து முப்பதியோரு வயதுவரையிலான பெண்களுக்கும் செக்ஸில் அதீத ஆர்வம் இருக்கிறது. அதன் பிறகு அவர்களது செக்ஸ் ஆர்வம் குறைந்துவிடுகிறது என்கிறது இந்த ஆய்வு.

தினசரிகள் மற்றும் ஊடகங்களில் முறையற்ற காதல் குறித்த செய்திகள் நிறைய வருவதாக நினைக்கிறோம்.   ஆனால் “இவை இங்கே செய்தியாக பார்க்கப்படுகின்றன என்பதால் நிறைய “முறையற்ற காதல்கள்” இருப்பதாக தோன்றுகிறது” என்றும் அந்த ஆய்வு சொல்கிறது.

மேலும், குழந்தைகளை அதீத  அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் பெற்றோர்கள் இந்தியாவில்தான் அதிகம் என்கிறது  இந்த சர்வே.