tvs snapdeal
 
மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை இணையத்தில் விற்பனை செய்ய டீ.வி.எஸ் மோட்டார் நிறுவனமும் இணையவியாபாரி ஸ்னாப்டீல் நிறுவனமும் புதன்கிழமையன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. கடநத நவம்பர் 2015ல் ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் எனும் இணைய மேடையை ஸ்னாப்டீல் துவங்கியது குறுப்பிடத் தக்கது.
இனி வீட்டில் அமர்ந்தபடியே வாடிக்கையாளர்கள், ஸ்னாப்டீல் தளத்தில் மோட்டார்சைக்கிளின் வகை, நிறம் மற்றும் வியாபாரியைத் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
டீ.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவைப் பிரிவு துணைத் தலைவர் ஜெ.எஸ்.ஸ்ரீனிவாசன் இது குறித்து கூறுகையில் நாங்கள் இந்த ஒப்பந்த்தின் மூலம் இணையதள நுகர்வோரை நேரிடையாக தொடர்புகொள்ள வலிமையான தொழில் நுட்பம் மற்றும் பரந்துவிரிந்த நுகர்வோரை உடைய ஸ்னாப்டீல் உடனான ஒப்பந்தம் கண்டிப்பாக உதவும் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளோம்” என நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தொழிற்க் கூட்டணி மற்றும் யுக்திகள் பிரிவு மூத்த துணைத் தலைவர் டொனி நவின் கூறுகையில் “ இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனமான டீ.வி.எஸ் மோட்டாரின் இருசக்கர வாகனங்கள் எங்கள் ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் எனும் இணைய மேடையை அலங்கரிப்பது எங்கள் வாகனவிற்பனைச் சேவையில் முக்கிய முன்னெற்றமாகும். இந்தச் சேவையைக் கொண்டுவந்த முதல் இணையவியாபாரத் தளம் தங்களுடையதுதான் எனவும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பல தேர்ந்தெடுக்கும் வசதிகள் புகுத்தி புதுமையான அனுபவத்தை தர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுமென உறுதியளித்துள்ளார்.