
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகிற 9 ஆம் தேதி தொடங்குகிறார். தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கும் ஜெயலலிதா, மே மாதம் 12 ஆம் தேதி தனது பிரச்சாரத்தை களசப்பாக்கம் தொகுதியில் நிறைவு செய்கிறார்.
சென்னையில் முதல்நாள் பிரச்சாரத்தில் ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் பேசுகிறார்.
Patrikai.com official YouTube Channel