லக பணக்காரர்களில் மிக முக்கியமானவரும், ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குதாரரருமான வாரன் பபெட், ஆப்பிள் நிறுவன போனை பயன்படுத்துவதில்லை. சாதாரண பிலிப் மாடல் மொபைல்போனையை பயன்படுத்திவருகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்களாக பத்துக்கும்  மேற்பட்டோர் இருக்கிறார்கள். ஆனாலும்  நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை தன்னகத்தே கொண்டுள்ளவர்  வாரன் பபெட். இவரது பெர்க்ஷியர் ஹாத்வே நிறுவனம், ஆப்பிள்   பங்குதாரர்களின் முதன்மையானவர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கிறது.

சமீபத்தில் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த வாரன் பபெட், “ஆப்பிள் நிறுவனத்தை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அந்நிறுவனத்தை முழுவதுமாக கையகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். எனக்கு தொழில்நுட்பம் குறித்த போதிய புரிதல் இல்லையென்றாலும், ஆப்பிள் தொழில்நுட்பம் மிகவும் பிடித்துள்ளது. அதனாலேயே  இதில் எங்கள் நிறுவனம் பங்குதாரராக இருக்கிறது.  ஆப்பிள் நிறுவனத்தை, முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

மேலும், “எனக்கு தொழில்நுட்பம் குறித்த புரிதல் அதிகமில்லை. ஆகவே,  பிளிப் வகை மொபைல்போனையே பயன்படுத்தி வருகிறேன். ஆப்பிள் ஐபோனை பயன்படுத்தியதில்லை” என்று அவர் கூறினார்.