அவசர முடிவு எடுக்கும் இளைஞர்கள் – அதிகரித்து வரும் தற்கொலைகள்
சென்னை மடிப்பாக்கம் துரைராஜ் தெருவைச் சேர்ந்தவர் 22 வயது மதுமிதா கல்லூரி மாணவி.  அவரும், அவரது தம்பி இருவரும் அவர்கள் தாய் மாமா சரவணன் வீட்டில் தங்கிப் படித்து வருகின்றனர்.
மதுமிதா, எப்போதும் செல்போனிலேயே அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார்.  படிப்பில் கவனம் செலுத்தாமல் சதா சர்வ நேரமும் மொபைல் போனிலேயே பேசி வந்ததால், இவரது மாமா சரவணன் இது பற்றி கண்டித்ததுள்ளார்.  அத்துடன் அவரிடம் இருந்த செல்போனை பறித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.  இதில் மனம் உடைந்த மதுமிதா, தனது அறையில் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இது பற்றி தகவலறிந்த மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போலச் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், ஈஸ்வரன் நகர், 10-வது தெருவைச் சேர்ந்தவர் 22 வயதான விக்னேஸ்வரன். கடந்த 5-ந் தேதி இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்ததால், அன்று முதல் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார்.
தனது நண்பனின் இறப்பால் மிகவும் பாதிக்கப்பட்ட விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நமது இளம் தலைமுறையினரின் இதைப்போன்ற கட்டுப்பாடற்ற உணர்ச்சி வசப்படல்  மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளது.
– லெட்சுமி பிரியா