
டில்லி
உச்சநீதிமன்றத்துக்கு ஷியா வக்ஃப் போர்ட் அளித்துள்ள வாக்குமூலப் பத்திரத்தில் தற்போது சர்ச்சை உள்ள இடத்தில் இருந்து வெகுதூரத்தில் மசூதி கட்டிக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள பாப்ரி மசூதியை கரசேவகர்கள் இடித்து அங்கே ராமர் சிலையை வைத்ததும், தற்போது அது சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதும் தெரிந்ததே. இது குறித்து பல வழக்குகள் அலகாபாத் நீதிமன்றத்திலும் உச்ச நீதி மன்றத்திலும் நிலுவையில் உள்ளன. உச்ச நீதி மன்றத்தில் மத்திய பிரதேச ஷியா வக்ஃப் போர்ட், அந்த சர்ச்சைக்குரிய நிலம் தங்களுடைய சொத்து என்றும், இது குறித்து எந்த முடிவும் தங்களை கலந்து பேசிய பின்பே எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக செவ்வாய் அன்று போர்ட் தனது வாக்குமூல பத்திரம் ஒன்றை உச்ச நீதிமன்றத்துக்கு அளித்தது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
அலகாபாத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க உதவி செய்யப்படும். சன்னி போர்ட் இந்த சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியாது. எனவே அனைத்து முடிவுகளும் ஷியா போர்டை மட்டும் கலந்து ஆலோசித்தால் போதுமானது. தற்போதுள்ள இடத்தில் இருந்து தூரமான ஒரு இடத்தில், அதுவும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இடத்தில் மசூதியை கட்டிக் கொள்ள ஷியா போர்ட் ஒப்புக் கொள்கிறது. மகாபுருஷரான ஸ்ரீராமனின் பிறந்த இடத்திலிருந்து தூரமாக மசூதியை கட்டிக் கொள்ள சம்மதிக்கிறோம். என கூறி உள்ளது.
ஆனால் சன்னி வக்ஃப் போர்ட் அந்த இடம் தங்களுக்கே சொந்தம் என்றும், அதற்கு முடிவு காணும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு எனவும் கூறி உள்ளது.
பா ஜ க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமி இது குறித்து அனைத்து வழக்குகளிலும் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும், வழிபாட்டு உரிமையை தடுக்கும் விதத்தில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]