முக்கூர் சுப்பிரமணியம்
முக்கூர் சுப்பிரமணியம்

சென்னை:
மைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் தலைமை செயலக அலுவலக அறையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் உள்ள அக்ரபாளையம் காலனியைச் சேர்ந்தவர் ஏ.இ. சண்முகம்.. இவர் ஆரணி ஒன்றிய மாவட்ட பிரதிநிதியாக இருக்கிறார்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்த இவர், அங்குள்ள அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் அறைக்கு வந்தார். அங்கு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் ஒரு கடிதமும் எழுதிவைத்திருந்தார்.

 
தமிழக முதல்வருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், “எனது மகள் அருணாவுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து சமையலர் காலி பணியிடத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் அழைப்பாணை வந்தது.
இது தொடர்பாக நானும் ஆரணி ஒன்றிய கழக செயலாளர் பி.ஆர்.ஜி. என்பவரும் எங்கள் மாவட்ட மந்திரியான முக்கூர் சுப்பிரமணியத்திடம் பேசினோம். “உன் மகளுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன். ஆனால் நீ ஒரு டன் இரும்பு கம்பி கொடு என்று கூறினார்.
நான் திரும்பி வந்துவிட்டேன். பிறகு மீண்டும் முக்கூர் சுப்பிரமணியத்தை சந்தித்தேன். அவர், “சேவூர் ராமச்சந்திரனை பார்” என்றார். சேவூர் ராமச்சந்திரனை சந்தித்த போது ஐம்பது ஆயிரம் ரூபாய் கேட்டார். நானும் கொடுத்துவிட்டு வந்தேன். பிறகு அமைச்சர் மீண்டும் என்னை அழைத்து, நீ கொடுத்த பணம் போதவில்லை. ஆகவே ஆரணி ஒன்றிய கழக செயலாளர் பி.ஆர்.பி. சேகரிடம் ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் கொடு என்றார். நானும் கொடுத்தேன். அப்போது ஆரணி ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மனும் இருந்தார்.
ஆனால் கடந்தவாரம்தான் தெரிந்தது. என் மகளுடன் அழைப்பாணை வந்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துவிட்டது. ஆனால் என் மகளுக்கு வேலை கிடைக்கவில்லை.

ஆகவே கடந்த மூன்றாம் தேதி அமைச்சரைப் பார்த்து கேட்டேன். அதற்கு அவர், “வரவில்லையா.. பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று அலட்சியமாக கூறி காரில் ஏறி சென்றுவிட்டார். அதனால் என் மகள் தற்கொலைக்கு முயன்றாள். நாங்கள்தான் அவளைக் காப்பாற்றி, தைரியம் சொல்லி வைத்துள்ளோம்.
சண்முகம்
சண்முகம்

எங்களை ஏமாற்றிய அமைச்சர் உட்பட மூவர்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அந்த கடிதத்தில் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்ச் முக்கூர் சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டு ஜெயலலிதா பேசியதாக கூறப்படுகிறது. ஆகவே,அவரது பதவி பறிக்கப்படுமோ என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.