வாஷிங்டன்:
உலகளவில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஐ.நா சுற்றுலா அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே சமயம் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது. இது 2016ம் ஆண்டில் 2 சதவீதமாக இருந்தது. தற்போது ஸ்பெயின், அமெரிக்காவை முந்தி உலகளவில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த நாடாக உள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் ஸ்பெயினுக்கு 82 மில்லியன் பயணிகள் சென்றுள்ளனர். 2016ம் ஆண்டை விட இது 9 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவுக்கு சென்று வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 73 மில்லியனாக உள்ளது.
பிரான்ஸ் தொடர்ந்து உலக பயணிகளை கவர்ந்து இழுப்பதில் முன்னிலை வகிக்கிறது. சுமார் 89 மில்லியன் பேர் கடந்த ஆண்டு மட்டும் பிரான்ஸூக்கு பயணித்துள்ளனர். முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு 2 வித காரணங்களை வல்லுனர்கள் கூறுகின்றனர். வலுவான டாலர் மதிப்பு மற்றும் டிரம்ப் அரசின் புதிய குடியேற்ற கொள்கை அறிமுகம் ஆகியவை தான் காரணமாம்.