isro
புதுடெல்லி‍‍
அமெரிக்கா உள்பட 7 வெளிநாடுகளின் 25 செயற்கைக் கோள்களை நடப்பாண்டில் இந்தியா விண்வெளிக்கு அனுப்ப இருப்பதாக நாடாளுமன்ற மா நிலஙகளவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் துறை அமைச்சகத்தின்  விண்வெளித்துறைப் பிரிவுக்கான அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றுக்கு இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக‌ பதிலளித்தார். அதில் அவர் கூறியிருப்ப‌தாவது‍:-
பி.எஸ்.எல்.வி.ராக்கெட் உதவியுடன் இதுவரை 21 நாடுகளின் 57 வெளி நாட்டு செயற்கைக் கோள்கள் விண்வெளிக்கு செலுத்தப்பட்டுள்ளன.
நடப்பு 2016 17 ஆம் ஆண்டில் 7 வெளிநாடுகளின் 25 செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அல்ஜீரியா மற்றும் கன்டா நாட்டின் 3 செயற்கைக் கோள்கள்,ஜெர்மனி 4, ஜப்பான் மற்றும் மலேசியாவின் தலா 1 அமெரிக்காவின் 12 என மொத்தம் 25  செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட உள்ளன.
2013 ஜனவரி முதல் 2015 டிசம்பர் வரை 13 நாடுகளின் 28 செயற்கைக் கோள்களை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ நிறுவனம் 80 மில்லியன் யுரோ தொகையை வருவாயாகப் பெற்றுள்ளது.