Rajpal Singh
 
ஹாக்கி விளையாட்டில்  நட்சத்திரங்களாய் ஜொலித்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரர்கள் ககன் அஜீத் சிங் மற்றும் ராஜ்பால் சிங் ஆகிய இருவரும் பஞ்சாப்பில் நடைபெற உள்ள  20 ‍ 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள பஞ்சாப் பி.ஏ.சி. மைதானத்தின்  பாதுகாப்பு அதிகாரிகளாக  நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் ராஜ்பால்  தற்போது டிஎஸ்பியாகவும்,   (போக்குவரத்து பிரிவு)  ககன் அஜீத் மொகாலி நகர காவல்துறை கண்காணிப்பாளராகவும் பொறுப்பில் உள்ளனர்.
இதுதொடர்பாக பணி ஓய்வுபெற்ற பஞ்சாப் கிரிக்கெட் சங்க தலைமை நிர்வாக அதிகாரி பிரிகேடியர் ஜி.எஸ் சாந்து கூறியதாவது‍: இதுவரை  பி ஏ சி மைதானத்தின் பாதுகாப்பு பணியில் பல்வேறு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையில் பணியாற்றி அரசியலில் இறங்கிய முன்னணி வீரரான பர்காத் சிங், முன்னாள் தடகள வீராஙகனை சுனிதா ராணி, மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் உள்பட ஏராளமான விளையாட்டு வீரர்கள் பஞசாப் காவல்துறையில் பணியாற்றி இதுபோன்ற மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளின்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டவர்களாவ‌ர்.
அர்ஜூனா விருது பெற்றவர்களுக்குப் பிறகு தற்போது முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் ராஜ்பாலும்   ககன் அஜீத்தும்  மைதானத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் அவர்.
பி ஏ சி விலையாட்டு மைதான பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ககன் அஜீத் இதுபற்றி கூறியதாவது:‍ சீருடைப்பணி என்பது கௌரவமும் மரியாதையும் கொண்டது. முதலில் ஒரு விளையாட்டு வீரனாக இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளேன். அதன்பின்னர் ஒரு காவல்துறை அதிகாரியாக இந்த நாட்டிற்கு சேவை செய்வதை பெருமையாக கருதுகிறேன். 2007 ஆம் ஆண்டில் நான் காவல் துறையில் பணியில் சேர்ந்தேன்.இந்த காவல் துறை உடை எனக்குள் எப்போதும் மிகப்பெரிய உணர்வுகளைத் தரக்கூடிய ஒன்று.
உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த முன்னணி வீரர்கள் இந்த மைதானத்தில் விளையாட உள்ளனர். அவர்களுக்கும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பளிப்பதற்காக  அரங்கத்தின் அனைத்து வாயில்களிலும் முறையான பரிசோதனைகள் நடத்தப்படும்.
நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் செவ்வாய்க்கிழமை அன்று மோதுகின்றன. அப்போது  பாதுகாப்பு பணியில் கூடுதலான பேர் ஈடுபடுத்தப்படுவார்கள்.  என்னையும் ராஜ்பாலையும் தவிர இங்கு ஏராளமான ஒலிம்பிக் வீரர்கள், அர்ஜூனா விருது பெற்ற வீரர்கள் உள்பட ஏராளமான முன்னணி விளையாட்டு வீரர்களான பல்ஜித் தில்லான், ஜூக்ராஜ் சிங் , கமல் ப்ரீத், தேஜ்பிர் ஆகியோர்  ப‌ஞ்சாப் காவல் துறையில் பணியாற்றுகின்றனர். விளையாட்டுப் பின்னணி கொண்ட ஏராளாமான வீரர்கள் பஞ்சாப் காவல் துறையில் இடம் பெற்றுள்ளனர் என்றார் ககன் அஜீத்.
” காவல் பணி முக்கியமா? விளையாட்டு முக்கியமா? என்றால் ஹாக்கி அணித்தலைவனாக அப்போதும் , காவல்துறை அதிகாரியாக தற்போதும் சேவை செய்து வருகிறேன். இது இரண்டுமே என் தேசத்தின் பணி. எனவே இதில் எது சிறந்தது  என வித்தியாசப்படுத்துவதை சிரமமாகவே உண்ர்கிறேன். இரண்டுமே நம் தேசப்பணி .  என் ஆடைகளின் நிறம் மட்டுமே மாறியிருக்கின்றன. முதலில் ஹாக்கி வீரனாக இருந்தபோது நீல நிற உடையும், காவல்துறைக்கு வந்தவுடன்  தற்போது ஹாக்கி உடையும் அணிந்திருக்கிறேன். இரண்டுமே பெருமைமிக்க உடைகள். இரண்டு பணிகளையுமே நான் ஒன்றாகவே பார்க்கிறேன்.இரண்டும் தேசத்தின் பெருமை காக்கும் பணி. பணி செய்யக்கூடிய களம் மட்டுமே வேறானது . மற்றபடி இரண்டிலும் உத்வேகத்திற்கும் துடிப்பிற்கும் குறைவில்லாதது.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் விளையாட்டு மைதானத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் பணி என்பது மிக முக்கியமான கடமை ஆகும். அதைச் சிறப்பாய்ச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அனைத்தும் நல்லபடியாய் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு ராஜ்பால் தெரிவித்தார்.