anitha
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, தோல்வியடைந்த மனோகரன், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவி சந்திரபாபு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தலில் வெற்றிப் பெற்றது செல்லும் என்று கூறியுள்ளார்.