மதுரை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், நகை திருடியதாக பொய் புகார் கொடுத்த நிகிதா என்ற பெண்  மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு  ஆஜராக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளார்.

 மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் மார்ச் 4-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை மாவட்ட நீதி​மன்​றம் நோட்​டீஸ் அனுப்பி உள்​ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையில், அஜித்குமார் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாலேயே உயிரிழந்தார் என்பதும், அவர் மீது நிகிதா கொடுத்த புகார் பொய் புகார் என்பதும் உறுதியாகி உள்ளது.

இந்த வழக்கு கடந்த வாரம் உயர் நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​தபோது, அஜித்​கு​மார் மீது நிகிதா என்​பவர் அளித்த நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை என்று விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ள​தாக​வும், இது தொடர்​பாக விரை​வில் நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும் எனவும் சிபிஐ தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி, “செய்​யாத குற்​றத்​துக்​காக ஒரு​வரை போலீ​ஸார் அடித்தே கொலை செய்​துள்​ளனர். போலீ​ஸாருக்கு தக்க பாடம் கற்​பிக்க வேண்​டும். விசா​ரணை முடி​யும் வரை காவலர் சிறை​யிலேயே இருக்​கட்​டும்” என்று கூறி, “பொய் புகார் அளித்த பெண் மீது என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது?” என சிபிஐ​யிடம் கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், அஜித்​கு​மார் காவல் மரண வழக்கை விசா​ரித்​து​வரும் மதுரை மாவட்ட நீதி​மன்​றத்​தில், நகை திருட்டு புகார் அளித்த நிகி​தாவை அழைத்து விசா​ரிக்க அனு​மதி கோரி, சிபிஐ தரப்​பில் மனு தாக்கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை மதுரை மாவட்ட தலைமை குற்​ற​வியல் நீதி​மன்ற நீதிபதி செல்​வ​பாண்டி விசா​ரித்​து, மார்ச் 4-ம் தேதி நிகிதா நீதி​மன்​றத்​தில் ஆஜராக நோட்​டீஸ் அனுப்ப உத்​தர​விட்​டார்.

காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமார் கொலையில் சிபிஐ ’அதிர்ச்சி’ தகவல்

அஜித்குமார் கொலை வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ…

கல்லூரி பேராசிரியை நிகிதா அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

[youtube-feed feed=1]