ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் புத்தகங்கள் திருட்டு: வக்கீல் கைது
 
ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து புத்தகங்களை திருடிய வக்கீலை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஹைதராபாத் உயர்ன்ஹீதிமன்றத்திலிருந்து ஏராலமான சட்டப் புத்தகங்கள் திருடி போனது தெரியவந்தது. இது பற்றி நீதிமன்ற பாதுகாவலர் புகார் கொடுத்திருந்தார். அதனடிப்படையில் புத்தகத் திருட்ட்டுச் சம்பவம் பற்றி காவல் துறைய்னர் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது  ஒரு நாள் அரைக் கால் சட்டை மற்றும் டீ சர்ட்டுடன் நுழைந்த ஒருவர் அங்கிருந்த புத்தகஙளை திருடுவது சிசிடிவி கேமராவில் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த நபர் யார் என்பதை தீவிரமாக தேடினர்.  அந்நப‌ர் அங்கு வக்கீலாக பணியாற்றும் வேணு கோபால கிருஷ்ணா என்பதைக் கண்டுபிடித்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் அதிரடியாக அவர் வீட்டைச் சோதனை செய்தபோது அங்கு பல்வேறு இடங்களிலிருந்து திருடப்பட்ட புத்தக்கங்கள் அலமாரியில் அடுக்கப்பட்டிருந்தன.
வழக்கு கொடுக்க வருபவர்களை கவர்வதற்காக கடந்த ஒரு வருடத்தில் ஹைதராபாத் உயர்நீதிமன்ற நூலகம் மற்றும் நீதிமன்ற அறைகளில் உள்ள 144 சட்டப் புத்தகங்களை திருடியதாக  அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அவரை  காவல்துரையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இத்திருட்டுச் சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.