வைகோ மீது தேர்தல் கமிசனில் புகார்!

Must read

வைகோ
வைகோ

நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, தனது பேச்சின் நடுவே, “பிற கட்சி ஆட்களை இழுப்பதற்கு பதில், தி.மு.க தலைவர் கருணாநிதி நாதஸ்வரம் ஊதி பிழைக்கலாம்” “ஆதி தொழில் செய்யலாம்” என்று பொருள்படும்படி பேசினார்.
இதற்கு பல்வேறுதரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து வைகோ தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் வைகோவி்ன் பேச்சு, சாதி ரீதியாக இருக்கிறது என்றம் தேர்தல் சட்டங்களுக்கு முரணாக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தி.மு.க.வைச் சேர்ந்த ஆரோக்கிய எட்வின் தேர்தல் கமிசனுக்கு புகார் அனுப்பி இருக்கிறார்.
ஆரோக்கிய எட்வின்
ஆரோக்கிய எட்வின்

இணையதளத்தில் தீவிரமாக இயங்கி, அதன் மூலம் நாங்குநேரி தொகுதிக்கு தி.மு.க. சார்பில் விருப்பமனு கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  தேர்தல் கமிசனுக்கு அளித்திருக்கும் புகாரில், “தி.மு.க. தலைவர் கருணாநிதியை சாதியைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. இது சட்டத்துக்கு புறம்பானது. கண்டிக்கத்தக்கது. இதனால் வகோ மீதூ தேர்தல் கமிசன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆரோக்கிய எட்வின்.

More articles

Latest article