வைகோ - ஆளூர் ஷாநவாஸ்
வைகோ – ஆளூர் ஷாநவாஸ்

.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சாதியைக்குறிப்பிட்டு பேசியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதியை மீண்டும் நாதஸ்வரம் ஊதபோகலாம் என்றும், ஆதி தொழில் செய்யலாம் என்றும் பொருள்படும் வகையில் பேசினார். அவரது பேச்சு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு தரப்பினர் வைகோவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ம.தி.மு.க.வுடன் மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வைகோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
“கலைஞர் நல்லா ஊதுவார்” என்று முன்பு ஒருமுறை பேசினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது வைகோவும் அதே பொருளில் பேசியுள்ளார். கலைஞரையும் திமுகவையும் விமர்சிக்க ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளபோது, இத்தகைய சாதிரீதியான தாக்குதல்களில் தலைவர்களே ஈடுபடுவது வேதனையளிக்கிறது. சாதி ஒழிப்புக் களத்தில் போராடும் எவராலும் இதை ஏற்க முடியாது”  – இவ்வாறு ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.